இந்தியா

ராம்லீலா நாடகத்தில் சண்டை.. ராமனை தள்ளி விட்டு சரமாரியாக தாக்கிய ராவணன் - வீடியோ வைரல்

Published On 2024-10-15 14:48 IST   |   Update On 2024-10-15 14:48:00 IST
  • நவராத்திரியை முன்னிட்டு ராம்லீலா நாடகம் நடத்தப்பட்டது.
  • நாடகத்தில் ராமனுக்கும் ராவணனுக்கும் இடையிலான போர் தொடங்கியது.

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டத்தில் நவராத்திரியை முன்னிட்டு ராம்லீலா நாடகம் நடத்தப்பட்டது. அந்த நாடகத்தில் ராமன் ராவணனாக நடித்த 2 நடிகர்கள் உண்மையிலேயே சண்டையிட்டு கொண்ட நிகழ்வு அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராம்லீலே நாடகத்தில் ராமனுக்கும் ராவணனுக்கும் இடையிலான போர் தொடங்கியது. அப்போது ராமனும் ராவணனும் அம்புகளை விட்டு சண்டையிட தொடங்குகின்றனர். அப்போது ஜெய்ஸ்ரீராம் என முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன.

அப்போது ராவணனாக நடித்த நபர் திடீரென்று ராமனை தள்ளி விடுகிறார். அதனால் கோபமடைந்த ராமன் ராவணனை தாக்க வருகிறார். அப்போது ராமனை கீழே தள்ளி அவரை ராவணன் அடிக்க தொடங்குகிறார். உடனே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இருவரையும் பிரித்து சமாதானப்படுத்த முயற்சிக்கின்றனர்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News