இந்தியா

வாலிபரை கத்தியால் குத்திக்கொன்ற இளம்பெண்- போலீஸ் நிலையத்தில் சரண்

Published On 2023-03-31 11:54 IST   |   Update On 2023-03-31 11:54:00 IST
  • கொலை குறித்து சங்கீதாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் ஏத்தூர்நகரம் எரவாடா பகுதியை சேர்ந்தவர் ராமதேங்கி ஸ்ரீனிவாஸ். இவர் தனது உறவினரான சங்கீதா என்ற பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தார்.

ஸ்ரீனிவாஸ் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து சங்கீதாவுக்கு தொந்தரவு கொடுத்து வந்தார்.

இதனால் ஸ்ரீனிவாஸ் மீது சங்கீதா போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஸ்ரீனிவாசை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜெயிலுக்கு சென்ற பிறகும் அவரது நடத்தையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

சிறையில் இருந்து வெளியே வந்த பின்னரும் சங்கீதாவிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார்.

இந்நிலையில் மது அருந்திவிட்டு குடிபோதையில் சங்கீதாவிடம் தவறாக நடக்க முயன்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சங்கீதா ஸ்ரீனிவாசிடம் தட்டிகேட்டார். அவர் தொடர்ந்து எல்லை மீறினார். இதனால் தொல்லை தாங்க முடியாத சங்கீதா, ஸ்ரீனிவாசின் கைகளை கட்டி வீட்டிலிருந்த கத்தியால் அவரை குத்தினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஸ்ரீனிவாஸ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

பின்னர் நேராக போலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி சரண் அடைந்தார்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஸ்ரீனிவாசின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை குறித்து சங்கீதாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News