இந்தியா
இலவச ரெயில் பயணத்துக்காக, மாற்றுத்திறனாளி போல நடித்த நபர் - வீடியோ வைரல்
- மாற்றுத்திறனாளி போல ரெயிலில் இருந்து கீழே இறங்கி வரும் நபர் பின்பு சாதாரணமாக நடந்து செல்கிறார்.
- இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது
இலவச ரெயில் பயணத்துக்காக, மாற்றுத்திறனாளி போல நடித்த ஒரு நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இணையத்தில் வைரலாக பரவி வரும் அந்த வீடியோவில், ரெயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளி போல ரெயிலில் இருந்து கீழே இறங்கி வரும் நபர் ஒருவர் பின்பு சாதாரணமாக நடந்து செல்கிறார்.
ரெயில்வே ஊழியர்களை முட்டாளாகிய இந்த நபருக்கு ஆஸ்கர் விருதே தரலாம் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.