இந்தியா
தெலுங்கானாவில் சண்டை சேவல்கள் ரூ.16.60 லட்சத்துக்கு ஏலம்
- பறிமுதல் செய்யப்பட்ட சேவல்களை கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
- பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு போட்டி போட்டு சேவல்களை ஏலம் எடுத்தனர்.
தெலுங்கானா மாநிலம் மொய்னா பாத் புறநகர் பகுதியில் உள்ள பாஜக எம்.எல்.சிக்கு சொந்தமான பண்ணை வீட்டில் சேவல் பந்தயம் நடத்தினர்.
போலீசார் பண்ணை வீட்டில் சோதனை நடத்தி 64 பேரை கைது செய்தனர். மேலும் ரூ.30 லட்சம் ரொக்கம், 86 சேவல்கள், கேசினோ நாணயங்கள், 54 கார்களை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட சேவல்களை கோர்ட்டில் ஒப்படைத்தனர். தற்போது ஆந்திராவில் பறவை காய்ச்சல் பரவி வருவதால் சேவல்களுக்கு நல்ல பராமரிப்பு தேவைப்படுவதால் சேவல்களை ஏலம் விட கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி சேவல்கள் நேற்று பொது ஏலம் விடப்பட்டன. பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு போட்டி போட்டு சேவல்களை ஏலம் எடுத்தனர். 86 சேவல்கள் ரூ.16.60 லட்சத்திற்கு ஏலம் போனது.