இந்தியா

35-வயது பெண்ணை மணந்த மறுநாளே உயிரிழந்த 75 வயது முதியவர்

Published On 2025-10-01 11:34 IST   |   Update On 2025-10-01 11:34:00 IST
  • இந்த ஜோடி தங்களது திருமணத்தை நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளனர்.
  • சங்ருராம் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி இறுதிச்சடங்குகளை உறவினர்கள் நிறுத்தினர்.

75 வயதான முதியவர் ஒரு வருட தனிமைக்கு பிறகு தனது வயதில் பாதி வயதுக்கும் குறைவான பெண்ணை மணந்த மறுநாளே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள குச்முச் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

75 வயதான சங்ருராம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தனது முதல் மனைவியை இழந்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். சங்ருராமுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் விவசாயம் செய்து தன்னை காப்பாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில், தான் கடந்த 29-ந்தேதி ஜலால்பூர் பகுதியைச் சேர்ந்த 35 வயதான பெண்ணை மணந்தார். இந்த ஜோடி தங்களது திருமணத்தை நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளனர்.

இவர்களின் திருமணத்திற்கு முதியவரின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், மறுமணம் முடிந்த மறுநாள் காலையில் திடீரென சங்ருராம் உயிரிழந்துள்ளார். இதனால் சங்ருராம் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி இறுதிச்சடங்குகளை உறவினர்கள் நிறுத்தினர். மேலும் திடீர் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என போலீசாரிடம் உறவினர்கள் முறையிட்டுள்ளனர்.

Tags:    

Similar News