இந்தியா

சத்தீஸ்கரில் 6 நக்சல்கள் சுட்டுக்கொலை: பாதுகாப்புப் படை அதிரடி

Published On 2025-11-13 22:53 IST   |   Update On 2025-11-13 22:53:00 IST
  • பீஜப்பூரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டை நடத்தினர்.
  • இந்த என்கவுன்டரில் நக்சல்கள் 6 பேர் கொல்லப்பட்டனர்.

ராய்ப்பூர்:

சத்தீஸ்கரின் பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்திராவதி தேசிய பூங்காவிற்குள் உள்ள காடுகளில் நக்சல்கள் பதுங்கி உள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பீஜப்பூர் டிஆர்ஜி, தண்டேவாடா டிஆர்ஜி, எஸ்டிஎப் மற்றும் பிற பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இந்த நடவடிக்கையின் போது பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே மோதல்கள் நடந்தன. இதில் நக்சல்கள் 6 பேர் கொல்லப்பட்டனர்.

என்கவுன்டருக்குப் பிறகு 3 பெண்கள் உட்பட 6 மாவோயிஸ்டுகளின் இறந்த உடல்கள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டன.

இதுதொடர்பாக, பீஜப்பூர் போலீஸ் அதிகாரி ஜிதேந்திர யாதவ் கூறுகையில், சத்தீஸ்கர் என்கவுன்டரில் ரூ.27 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சல்கள் 6 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏகே-47, எல்எம்ஜி, ஐஎன்எஸ்ஏஎஸ் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களும் மீட்கப்பட்டன. பீஜப்பூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 144 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளனர், 499 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், 560 பேர் சரணடைந்துள்ளனர்.மாவோயிஸ்ட் அமைப்பு முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Tags:    

Similar News