இந்தியா

திருமண நிகழ்ச்சியை போர்க்களமாக மாற்றிய ரசகுல்லா

Published On 2023-11-21 05:14 GMT   |   Update On 2023-11-21 08:45 GMT
  • மோதலில் 6 பேருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, இந்த தகவல் வெளியானது.

திருமண நிகழ்ச்சி, சுபமுகூர்த்த நிகழ்ச்சி என்றால் அங்கு சுவையான உணவு வகைகள் பரிமாறப்படும். உணவு வகைகளுடன் இனிப்பு போன்ற பலகாரங்கள் வழங்கப்படும்.

முதல் பந்தியில் அனைத்து வகை பலகாரங்கள் வைக்கப்படும். நேரம் செல்லசெல்ல தட்டுப்பாடு ஏற்பட்டு பந்திக்கு வரும் பலகாரங்கள் குறைந்து போகும். இவ்வாறு வரவில்லை என்றால் அதை பெரியதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், மாப்பிள்ளை வீட்டுக்காரர்களுக்கே பலகாரம் இல்லையா... பெண் வீட்டாருக்கே இல்லையா... நான் யார் தெரியுமா... என சண்டையை வலுக்கட்டாக இழுக்கும் நபர்களும் உண்டு.

இதேபோன்ற சம்பவம் ஒன்று உத்தர பிரதேச மாநில ஆக்ராவில் நடைபெற்றுள்ளது. கடந்த ஞாயிறு இரவு ஷாம்சாபாத் பகுதியில் திருமண நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்போது ரசகுல்லா தட்டுப்பாடு ஏற்பட்டதாக ஒருவர் கூற, அது திருமண நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் தீயாக பரவியது.

எப்படி ரசகுல்லா தட்டுப்பாடு ஏற்படலாம் என வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பில் முடிந்துள்ளது. இதில் 6 பேர் காயம் அடைந்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபிறகு ஒரு வழியாக மோதல் முடிவுக்கு வந்துள்ளது. இந்த மோதலில் 6 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வர, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News