ரூ.3 கோடி மதிப்பிலான 5,140 செல்போன்கள் திருட்டு - 7 பேர் கைது
- செல்போன் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக கூரியர் நிறுவனம் அளித்த புகாரில் வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
- செல்போன்கள் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட கண்டெய்னரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூரில் ரூ.3 கோடி மதிப்பிலான 5,140 செல்போன்கள் திருடப்பட்ட விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் இருந்து பெங்களூருவுக்கு ஒரு கண்டெய்னரில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.3 கோடி மதிப்புள்ள செல்போன்கள் திருடப்பட்டது.
செல்போன் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக கூரியர் நிறுவனம் அளித்த புகாரில் வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக கண்டெய்னர் டிரைவர் ராகுலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய நிலையில் தற்போது 7 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 56 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் செல்போன்கள் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட கண்டெய்னரையும் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில்,
குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் 300 முதல் 400 மொபைல் போன்களை விற்றுள்ளதாகவும், IMEI எண்ணின் அடிப்படையில் மொபைல் போன்கள் முடக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.