இந்தியா

விமான விபத்து எதிரொலி: ஒரே நாளில் 5 விமானங்களை ரத்து செய்த ஏர் இந்தியா

Published On 2025-06-17 17:49 IST   |   Update On 2025-06-17 17:53:00 IST
  • அகமதாபாத்-லண்டன் இடையிலான ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறால் ரத்து செய்யப்பட்டது.
  • பாரீசில் இருந்து டெல்லி நோக்கி பயணிக்கக்கூடிய ஏ.ஐ.142 என்ற எண் கொண்ட விமானம் ரத்து செய்யப்பட்டது.

புதுடெல்லி:

அகமதாபாத்-லண்டன் இடையிலான ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான விபத்துக்கு பிறகு முதல் முறையாக சேவையை அறிவித்த நிலையில் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இருந்து பாரீஸ் செல்லும் AI-143 என்ற எண் கொண்ட ஏர் இந்தியா விமானத்தின் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், விமானம் புறப்படுவதற்கு முன்பு கட்டாயம் நடத்தப்பட வேண்டிய விமான ஆய்வின்போது தொழில்நுட்ப கோளாறு ஒன்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான பயணிகளுக்கு ஓட்டல் வசதி வழங்கியிருக்கிறோம். பயணம் ரத்துசெய்யப்பட்ட நிலையில் முழு கட்டண தொகையையும் திருப்பித் தரவோ அல்லது பயணிகள் விரும்பினால் மீண்டும் விமான பயணம் மேற்கொள்ள வசதி ஏற்படுத்தவோ தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.

டெல்லியில் இருந்து துபாய் செல்லும் AI 915 விமானம், டெல்லியில் இருந்து வியன்னா செல்லும் AI 153 விமானம், டெல்லியில் இருந்து பாரீஸ் செல்லும் AI 143 விமானம், அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லும் AI 159 விமானம் மற்றும் லண்டனில் இருந்து அமிர்தசரஸ் செல்லும் AI 170 விமானம் என 5 விமானங்களின் சேவையை ஏர் இந்தியா ரத்து செய்துள்ளது.

இன்று ஒரே நாளில் 5 விமானங்களின் சேவையை ஏர் இந்தியா ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News