இந்தியா

நொய்டாவில் கட்டிட பணியின் போது லிப்ட் அறுந்து விழுந்து 4 தொழிலாளர்கள் பலி

Published On 2023-09-15 10:35 GMT   |   Update On 2023-09-15 10:35 GMT
  • பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கட்டுமான பொருட்களை லிப்டில் எடுத்து சென்றனர்.
  • படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தொழிலாளர்களை மீட்டு சிகிச்கைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் நொய்டா பிஸ்ராக் கோட்வாலி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் புதிதாக கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இன்று காலை இப்பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கட்டுமான பொருட்களை லிப்டில் எடுத்து சென்றனர். அப்போது லிப்ட் திடீரென அறுந்து விழுந்தது.

இதில் லிப்டில் சென்ற 4 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தொழிலாளர்களை மீட்டு சிகிச்கைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த போது லிப்டில் 12 பேர் இருந்தனர். அதிக பாரம் தாங்காமல் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. மதிக்க முடிவு செய்துள்ளனர். பக்தர்கள் வந்து செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட உள்ளது. மாடவீதிக்கு வெளியே காத்திருக்கும் பக்தர்களை வரிசையில் அனுமதித்து கருட சேவையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

Tags:    

Similar News