null
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை அதிகவிலைக்கு விற்ற 4 பேர் கைது
- ரூ.1200 மதிப்புள்ள டிக்கெட்டுகளை சிலர் ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- டிக்கெட்டுகளை எப்படி வாங்கினார்கள் என்றும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூர்:
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த நிலையில் ரூ.1200 மதிப்புள்ள டிக்கெட்டுகளை சிலர் ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் கண்காணித்தனர். அப்போது கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்ற சரண்ராஜ் என்பவரை மடக்கிப்பிடித்து 12 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்ற ஹர்ஷவர்தன் சங்க்லேச்சா, வினய், வெங்கடசாய் ஆகிய மேலும் 3 பேரையும் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து மொத்தம் 32 டிக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் இந்த டிக்கெட்டுகளை எப்படி வாங்கினார்கள் என்றும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.