இந்தியா

10ஆம் வகுப்பு மாணவனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய 2 குழந்தைகளின் தாய் கைது..!

Published On 2025-06-11 19:07 IST   |   Update On 2025-06-11 19:07:00 IST
  • கணவரிடம் விவாரத்து பெற்ற பெண்ணிற்கு இரண்டு குழந்தைகளும் உள்ளன.
  • ஏற்கனவே அந்த பெண் இருவரை திருமணம் செய்துள்ளார்.

மத்திய பிரதேசம் ராட்லாமில் 35 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயது மகளும் மற்றும் 9 வயது மகனும் உள்ளனர். இவர் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார். கடந்த ஒரு வருடமாக 10ஆம் வகுப்பு மாணவனிடம், தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார். இதனால் போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

அந்த பெண்ணிற்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில்தான் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவனிடம், கடந்த ஒருவருடமாக தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வருகிறார். தனது வீட்டிற்கு அழைத்து திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார்.

தொடர்ந்து வற்புறுத்தியதால், மாணவன் ஒரு கட்டத்தில் தனது தந்தையிடம் நடந்ததை கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து தந்தை போலீசில் புகார் அளிக்க, போலீசார் அந்த பெண்ணை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News