இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் மேலும் 3 திரையரங்குகள் திறக்கப்படும்: துணைநிலை ஆளுநர் தகவல்

Published On 2023-07-19 01:24 GMT   |   Update On 2023-07-19 01:24 GMT
  • புல்வாமா, சோபியான் ஆகிய இடங்களில் கடந்த ஆண்டு திரையரங்குகள் திறக்கப்பட்டன
  • பந்திபோரா, கதர்பால், குல்கால் மாவட்டங்களில் தலா ஒரு திரையரங்குகள் திறக்கப்படும்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு சினிமா அரங்குகள் திறக்கப்பட்டுள்ளது. புல்வாமா, சோபியான் ஆகிய இடங்களில் ஏற்கனவே சினிமா திரையரங்குகள் கடந்த வருடம் திறக்கப்பட்டன. கடந்த சில நாட்களுக்கு முன் பாரமுல்லாவில் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் பந்திபோரா, கதர்பால், குல்காம் மாவட்டங்களில் தலா ஒரு திரையரங்குகள் திறக்கப்படும் என ஜம்மு-மாநில துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா தெரிவித்துள்ளார்.

மேலும், ''பாகிஸ்தான் மற்றும் ஒரு சிலரின் சுற்றுச்சூழல் அமைப்பு பல வருடங்களாக ஜம்மு-காஷ்மீர் மக்களின் கனவுகளை அழிக்க முயற்சித்தன.

ஆனால் தற்போது ஜம்மு- காஷ்மீர் மக்கள் மற்றும் இளைஞர்கள் புதிய கனவுகளை கொண்டுள்ளனர். புதிய சூழ்நிலை உருவாக உதவி புரிந்து வருகிறார்கள் என்பதை என்னால் கூறமுடியும். அமைதியான இடத்தில்தான் கலை உருவாகும் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். எங்கு அமைதி இல்லையே, அங்கு கலை இல்லை.

ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட சூழ்நிலையால் கலைஞர்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால் இப்போது, ஜம்மு காஷ்மீரின் இழந்த பெருமையை மீண்டும் கொண்டுவர நமது கலைஞர்கள் புதிய ஆற்றலுடன் பணியாற்றி வருகின்றனர'' எனத் தெரிவித்தார்.

Tags:    

Similar News