இந்தியா
குடியிருப்பு கட்டிடம் இடிந்து 3 பேர் பலி - மீட்பு பணிகளை பார்வையிட்ட மகாராஷ்டிரா முதல் மந்திரி
- மகாராஷ்டிராவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்த விபத்தில் 3 பேர் பலியாகினர்.
- இடிபாடுகளில் சிக்கிய 12 பேரை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் பிவண்டி பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் அந்தக் கட்டிடம் தரைமட்டமான நிலையில், உள்ளே இருந்த 15-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 12 பேரை பத்திரமாக மீட்டனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலியாகினர் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
விபத்து குறித்து அறிந்ததும் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே சம்பவ இடம் சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டார். விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என தெரிவித்தார்.