உடற்கல்வி ஆசிரியரிடம் 2500 ஆபாச வீடியோக்கள்- இளம்பெண் போலீசில் பரபரப்பு புகார்
- ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியரும், கிரிக்கெட் பயிற்சியாளருமாக இருப்பவர் ஏபிவி மேத்யூ.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஏபிவி மேத்யூவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கர்நாடகாவில் கடந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலை ஒட்டி பரபரப்பான பரப்புரைக்கு மத்தியில் ஹாசன் தொகுதி முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள் இணையதளத்தில் வெளியாகி, நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவரை மிஞ்சும் வகையில் பெங்களூருவில் மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதன் விபரம் வருமாறு;-
பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியரும், கிரிக்கெட் பயிற்சியாளருமாக இருப்பவர் ஏபிவி மேத்யூ. இவர் சில பெண்கள் மற்றும் இளம் பெண்களுடன் அந்தரங்கமாக இருந்த காட்சிகளை வீடியோ எடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொனனகுண்டே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், மேத்யூவிடம் 2500-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருப்பதாகவும், அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறியுள்ளார். இதை அறிந்த மேத்யூ தலைமறைவாகி விட்டார். பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் மகளிர் ஆணையத்திலும் மேத்யூ மீது இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து கொனனகுண்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஏபிவி மேத்யூவை தீவிரமாக தேடி வருகின்றனர்.