இந்தியா
புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி உருவாக்கப்பட்ட மணல் சிற்பம்

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பம்

Published On 2022-05-31 16:53 IST   |   Update On 2022-05-31 21:13:00 IST
ஒடிசா கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் மணலில் பல பெரிய சிகரெட் துண்டுகளில் படுத்திருக்கும் பெரிய எலும்புக்கூட்டை உருவாக்கியுள்ளார்.
புகையிலை பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் தீங்கு மற்றும் அதன் கொடிய விளைவுகள் குறித்து மக்களுக்கு எச்சரிக்கும் விதமாக ஆண்டுதோறும் மே 31-ம் தேதி அன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி, இந்தியாவின் பிரபலமான மணல் சிறப்க் கலைஞர் பத்மஸ்ரீ விருதுபெற்ற சுதர்ஷன் பட்நாயக் ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் மணல் சிற்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

ஒடிசா கடற்கரையில் பல பெரிய சிகரெட் துண்டுகளின் மேல் பெரிய எலும்புக்கூடு படுத்திருப்பது போன்ற சிற்பம் உருவாக்கியுள்ளார். புகையிலை உட்கொள்வதால் ஏற்படும் விளைவு குறித்து பிரதிபலிக்கும் விதமாக இந்த சிற்பம் அமைந்திருந்தது. இதனை, பொது மக்கள் பலர் பார்த்து செல்கின்றனர்.

மேலும், இந்த மணல் சிற்ப புகைப்படத்தை சுதர்சன் பட்நாயக் தனது டுவிட்டர் பக்கத்தில்,  #உலக புகையிலை தினத்தை முன்னிட்டு. இந்தியாவில் ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் எனது மணல் கலை, புகையிலை வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவு 35000க்கும் மேற்பட்ட லைக்ஸ் மற்றும் 4000க்கும் மேற்பட்ட முறை ரீட்விட் செய்யப்பட்டுள்ளது. முழு மணல் சிற்பத்தின் வீடியோவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவு சமூக ஊடகங்களில் அதிக கவனத்தை பெற்றுவருகிறது.

இதையும் படியுங்கள்.. 2024 தேர்தலில் பாஜகவுக்கு இடமில்லை என மக்கள் கூற விரும்புகின்றனர் - மம்தா பானர்ஜி
Tags:    

Similar News