இந்தியா
கேரள முதல்வர் பினராயி விஜயன்

மக்களுக்கும் இயற்கைக்கும் கேடு விளைவிக்கும் புகையிலை பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்- கேரள முதல்வர்

Published On 2022-05-31 10:23 GMT   |   Update On 2022-05-31 10:23 GMT
புகையிலையால் கொடிய பக்கவிளைவுகளும் ஏற்படுவதால் மக்கள் அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கேரள முதல்வர் பினராயி விஜயன், புகையிலை பயன்பாடு தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அந்த பதிவில், கொரோனா தொற்று நோயால் ஏற்படும் உடல் நலப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, புகையிலையைப் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் இயற்கைக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதால், மக்கள் புகையிலையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், புகையிலையால் கொடிய பக்கவிளைவுகளும் ஏற்படுவதால் மக்கள் அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். எனவே புகையிலையை கைவிட்டு ஆரோக்கியமான சமூதாயத்தை உருவாக்க அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படியுங்கள்.. சாக்கடையில் உருவாகும் கொசுக்களால் பரவும் ‘வெஸ்ட் நைல்’ காய்ச்சல்
Tags:    

Similar News