இந்தியா
மகிந்த ராஜபக்சே

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்: முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை

Published On 2022-05-30 11:53 GMT   |   Update On 2022-05-30 11:53 GMT
இலங்கையில் நடந்த வன்முறை மற்றும் தாக்குதல் தொடர்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
கொழும்பு:

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை பிரதமர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. அரசு வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன.

இதையடுத்து ஏற்பட்ட நெருக்கடியை தொடர்ந்து இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார்.

இதற்கிடையே இலங்கையில் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதையடுத்து இலங்கையில் நடந்த வன்முறை மற்றும் தாக்குதல் தொடர்பாக மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.

விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராகுமாறு பதவி விலகிய பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு நேற்று மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.



இதுபோல முன்னாள் அமைச்சர்கள் நமல் ராஜபக்சே, ரோகிதா அபே குணவர்த்தனா, ஜோன்ஸ்டன் பெர்னான்டோ ஆகியோரும் ஆணையத்தின் முன்பு ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இவர்கள் வருகிற புதன்கிழமை ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்கும்படியும் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News