இந்தியா
யுபிஎஸ்சி

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு - சிவில் சர்வீஸ் தேர்வில் 685 பேர் வெற்றி

Published On 2022-05-30 15:30 IST   |   Update On 2022-05-30 21:15:00 IST
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிகளுக்கான 2021-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் 3 இடங்களைப் பெண்கள் பிடித்துள்ளனர்.
புதுடெல்லி:

ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான சிவில் சர்வீஸ் தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்துகிறது. இது முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு என 3 கட்டங்களாக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

2021-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜனவரி மாதம் நடந்து முடிந்தது. இதையடுத்து, இந்தத் தேர்வில் வெற்றி பெற்று தகுதி செய்யப்பட்டவர்களுக்கான நேர்முகத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது.
 
இந்நிலையில், சிவில் சர்வீஸ் தேர்வு முடிவை யு.பி.எஸ்.சி. இன்று அறிவித்தது. அதன்படி, மொத்தம் 685 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

2021-ம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் 3 இடங்களைப் பெண்களே பிடித்துள்ளனர். இதில் முதல் இடத்தை சுருதி சர்மாவும், 2-வது இடத்தை அங்கிதா அகர்வாலும், 3-வது இடத்தை காமினி சிங்லாவும் பிடித்து அசத்தியுள்ளனர்.

Tags:    

Similar News