இந்தியா
லாலு பிரசாத்தின் மகள் மிசா பாரதி

மாநிலங்களவை தேர்தல்: பீகாரில் லாலு பிரசாத்தின் மகள் வேட்புமனு தாக்கல் செய்தார்

Published On 2022-05-28 02:14 GMT   |   Update On 2022-05-28 02:14 GMT
லாலு பிரசாத்தின் மகளும், மாநிலங்களவை எம்.பி.யுமான மிசா பாரதி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. பயாஸ் அகமது ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
பாட்னா :

பீகாரில் இருந்து விரைவில் காலியாக உள்ள 5 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. மாநில எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் பா.ஜனதா, ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சிகள் தலா 2 இடங்களிலும், ஐக்கிய ஜனதாதளம் கட்சி ஓரிடத்திலும் வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

இதில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரீய ஜனதாதள கட்சிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். லாலு பிரசாத்தின் மகளும், மாநிலங்களவை எம்.பி.யுமான மிசா பாரதி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. பயாஸ் அகமது ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

அவர்கள் இருவரும் நேற்று தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். அப்போது மிசா பாரதியின் தந்தையும், கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ், சகோதரர்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோரும் உடன் இருந்தனர். மிசா பாரதி எம்.பி.யின் தற்போதைய பதவிக்காலம் அடுத்த மாதம் 7-ந் தேதியுடன் நிறைவடைகிறது.
Tags:    

Similar News