இந்தியா
மனைவி நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டர்

வரதட்சணை கேட்டு மனைவி நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டர்

Published On 2022-05-25 12:36 IST   |   Update On 2022-05-25 12:36:00 IST
பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரே வரதட்சணை கேட்டு மனைவியின் நெற்றி பொட்டில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி:

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் குருகுலபேட்டை பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (வயது 28). இவர் முதிவேடு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி ஜாப்பர்ஸ் விஷ்ணு பிரியா 24). இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் நடந்து ஒரு ஆண்டு வரை தம்பதியினர் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினர்.

இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார் அவரது தந்தை தேவராஜ் தாயார் குருவ ராணி ஆகியோர் வரதட்சணை கேட்டு விஷ்ணுபிரியாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மீண்டும் ரூ.10 லட்சம் வரதட்சணைக் கேட்டு விஷ்ணு பிரியாவை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

அப்போது தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து விஷ்ணுபிரியா நெற்றிப்பொட்டில் வைத்து வரதட்சனை வாங்கி வரவில்லை என்றால் சுட்டு கொன்று விடுவதாக சுகுமார் மிரட்டி உள்ளார்.

இதையடுத்து விஷ்ணுபிரியா மதன பள்ளியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்தார். அங்குள்ள போலீசில் இதுகுறித்து புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முரளிகிருஷ்ணாசப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் சுகுமார் அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News