இந்தியா
வங்காள கல்வித்துறை இணை அமைச்சர் பரேஷ் அதிகாரி

சட்டவிரோதமாக மகளுக்கு அரசு வேலை: வங்காள அமைச்சரிடம் 3-வது நாளாக சிபிஐ விசாரணை

Published On 2022-05-21 10:49 GMT   |   Update On 2022-05-21 10:49 GMT
சட்டவிரோத வேலை நியமனம் விவகாரம் தொடர்பாக சிபிஐ இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக விசாரணை நடத்தி வருகிறது.
மேற்குவங்க மாநில கல்வித்துறை இணை அமைச்சர் பரேஷ் அதிகாரியின் மகள் அங்கிதாவிற்கு ஆரம்பப் பள்ளி ஆசிரியையாக சட்டவிரோதமாக நியமனம் செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்ப ஏற்படுத்தியது.

இதுதொடர்பான வழக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அங்கிதாவை அரசு உதவி பெறும் பள்ளியில் பணியிலிருந்து நீக்கியதுடன், ஆசிரியராகப் பணியாற்றி 41 மாத காலத்தில் வாங்கிய சம்பளத்தைத் திருப்பித் தருமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக விசாரணை நடத்தி வருகிறது. அப்போது, இணை அமைச்சர் பரேஷ் இன்று காலை 10.35 மணியளவில் சிபிஐ அலுவலகத்திற்கு வந்திருந்தார். சட்டவிரோத வேலை நியமனம் தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் அவர் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிபிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், " இணை அமைச்சர் அங்கிதாவின் நியமனம் தொடர்பாக அவர் தனது மொபைல் போனில் இருந்து செய்த பல்வேறு தொலைபேசி அழைப்புகள் தொடர்பான கேள்விகள் பரேஷ் அதிகாரியிடம் கேட்கப்படலாம். நேற்று போல இன்றும் முழு விசாரணையையும் வீடியோ காட்சி பதிவு செய்யப்படும் என்றனர்.

விசாரணை தொடர்பாக இணை அமைச்சரிடம் வியாழக்கிழமை அன்று கிட்டத்தட்ட நான்கு மணி நேரமும், வெள்ளிக்கிழமை ஒன்பது மணி நேரமும் விசாரணை நடத்தப்பட்டது.      

தொடர்ந்து,  சிபிஐ அதிகாரிகள் அங்கிதாவை அடுத்த வாரம் விசரணைக்கு அழைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்.. என் தந்தை மன்னிக்க கற்றுத்தந்தவர்- ராகுல் காந்தி டுவீட்
Tags:    

Similar News