இந்தியா
பாரத் பெட்ரோலியம்

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிட்டெட் பங்குகளை விற்க முடிவு

Update: 2022-05-18 08:20 GMT
எல்.ஐ.சியின் பொதுப்பங்குகள் சமீபத்தில் விற்கப்பட்ட நிலையில், தற்போது பி.பி.சி.எல் நிறுவனத்தையும் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புது டெல்லி :

பொதுத்துறை நிறுவனமான 'பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்' நிறுவனத்தின் பங்குகளை முழுமையாக விற்க, மத்திய அரசு திட்டமிட்டது.

ஆனால், பி.பி.சி.எல்., நிறுவனத்தை முழுமையாக வாங்க, யாரும் முன்வரவில்லை. இதையடுத்து அந்த நிறுவனத்தின் 20 - 25 சதவீத பங்குகளை மட்டும் தற்போதைக்கு விற்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வேலைகள் தற்போது நடந்து வருவதாக, பெட்ரோலியத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எல்.ஐ.சியின் பொதுப்பங்குகள் சமீபத்தில் விற்கப்பட்ட நிலையில், தற்போது பி.பி.சி.எல் நிறுவனத்தையும் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News