இந்தியா
இரட்டைக்கொலை வழக்கில் 25 பேருக்கு ஆயுள் தண்டனை

கேரளாவில் நடந்த இரட்டைக்கொலை வழக்கில் 25 பேருக்கு ஆயுள் தண்டனை

Update: 2022-05-17 05:39 GMT
கேரளாவில் நடந்த இரட்டைக்கொலை வழக்கில் 25 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பாலக்காடு மாவட்ட குற்றவியல் கோர்ட்டு நீதிபதி தீர்ப்பளித்தார்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் நூருதீன். இவரது சகோதரர்கள் ஹம்சா, குஞ்சு முகமது. இவர்கள் 3 பேரும் ஏ.பி.சன்னி கட்சியின் உறுப்பினர்களாக இருந்தனர். இந்தக் கட்சிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.

இந்த முன்விரோதத்தில் கடந்த 2013ம் ஆண்டு 3 சகோதரர்கள் மீதும் தாக்குதல் சம்பவம் நடந்தது. இதில் நூருதீன், ஹம்சா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். குஞ்சு முகமது காயங்களுடன் உயிர் தப்பினார்.

இது தொடர்பான வழக்கில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை பாலக்காடு மாவட்ட குற்றவியல் கோர்ட்டு நீதிபதி ரஜிதா விசாரித்து வந்தார். வழக்கில் தொடர்புடைய 25 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து அவர் நேற்று தீர்ப்பளித்தார். மேலும் 25 பேருக்கும் தலா ரூ.1.15 லட்சம் அபராதம் விதித்த அவர், அந்த பணத்தை உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News