இந்தியா
பேருந்தில் தீ விபத்து

ஜம்மு காஷ்மீரில் பேருந்து தீப்பிடித்ததில் 4 பேர் பலி- 20 பேர் படுகாயம்

Published On 2022-05-13 13:22 GMT   |   Update On 2022-05-13 13:22 GMT
தீ விபத்துக்கான காரணம் குறித்து தடயவியல் துறை ஆய்வு செய்து வருவதாக ஜம்மு மண்டல காவல்துறை கூடுதல் இயக்குனர் ஜெனரல் முகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள கத்ரா பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. கத்ரா பகுதியில் இருந்து ஜம்மு நோக்கிச் சென்ற பேருந்து அங்கிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள நோமாய் என்ற பகுதி அருகே திடீரென தீப்பிடித்தது.

இந்த தீ விபத்தில் பேருந்தில் இருந்த 4 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து தடயவியல் துறை ஆய்வு செய்து வருவதாகவும், முதற்கட்ட விசாரணையில் வெடிகுண்டு எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்றும் ஜம்மு மண்டல காவல்துறை கூடுதல் இயக்குனர் ஜெனரல் முகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்.. டுவிட்டர் வாங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்த எலான் மஸ்க்
Tags:    

Similar News