இந்தியா
வினய் மோகன் கத்ரா

இந்திய வெளியுறவுத்துறை செயலாளராக வினய் மோகன் கத்ரா பொறுப்பேற்பு

Published On 2022-05-01 06:10 GMT   |   Update On 2022-05-01 06:10 GMT
இந்திய வெளியுறவுத்துறை செயலாளராக இருக்கும் ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா பதவிக்காலம் நிறைவடைந்ததால், புதிய செயலாளராக வினய் மோகன் கத்ரா இன்று பொறுப்பேற்றார்.
புதுடெல்லி:

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் மந்திரி மற்றும் இணை மந்திரி பதவிக்கு அடுத்தபடியாக வெளியுறவுத்துறை செயலாளர் பதவியும் அவரது பணிகளும் முக்கியத்துவமானது.

இதற்கிடையே, இந்திய வெளியுறவுத்துறை செயலாளராக இருக்கும் ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.

இந்நிலையில், வெளியுறவுத்துறை புதிய செயலாளராக வினய் மோகன் கத்ரா இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.

வெளியுறவுத்துறை விவகாரங்களில் நீண்டகால அனுபவம் பெற்றவரான வினய் மோகன் கத்ரா, நேபாளத்துக்கான தலைமை தூதராக பணியாற்றி வந்தார்.

வினய் மோகன் கத்ரா கடந்த 1988-ம் ஆண்டில் வெளியுறவுத் துறை பணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News