இந்தியா
வணிக சிலிண்டர்

வணிக பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு

Published On 2022-05-01 04:18 GMT   |   Update On 2022-05-01 04:18 GMT
வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.102.50 அதிரடியாக உயர்ந்துள்ளது.
சமையல் கியாஸ் மற்றும் பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் கியாஸ் கிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொறு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றன.

அந்த வகையில் இந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.102.50 என அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி, 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் ரூ. 102.5க்கு உயர்ந்துள்ளது. இதுவே, 5 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ. 655-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால், வணிக பயன்பாட்டிற்கான எல்.பி.ஜி. சிலிண்டரின் விலை ரூ. 2,253-லிருந்து ரூ. 2,355.50- ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்.. இலங்கை நாட்டு மக்களுக்கு மே தின வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மகிந்த ராஜபக்சே
Tags:    

Similar News