இந்தியா
கொலை

ஒடிசாவில் கோவில் விழாவில் கிராம மக்கள் மோதல்- 2 வாலிபர்கள் கொலை

Published On 2022-04-23 12:15 IST   |   Update On 2022-04-23 12:15:00 IST
ஒடிசாவில் கோவில் விழாவில் கிராம மக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 2 வாலிபர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கோவில் திருவிழா நடந்தது. இதில் சிந்திப்பூர் மற்றும் ஜோடியாகுடா கிராம மக்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.

ஒருவருக்கொருவர் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கிக்கொண்டனர். இந்த மோதலில் சுரேந்திரஜானி, நாயக் ஆகிய 2 வாலிபர்கள் கொல்லப்பட்டனர். சோம்நாத் ஜானி என்பவர் படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

Similar News