இந்தியா
கொரோனா பரிசோதனை

ஒரே நாளில் 60 சதவீதம் உயர்வு- டெல்லியில் கொரோனா தினசரி பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை தாண்டியது

Published On 2022-04-21 10:17 IST   |   Update On 2022-04-21 10:17:00 IST
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி இதுவரை 83.33 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று 4,49,114 மாதிரிகள் அடங்கும்.
புதுடெல்லி:

டெல்லி மற்றும் மகாராஷ்டிரா, அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நேற்று பாதிப்பு 2,067 ஆக இருந்த நிலையில் இன்று பாதிப்பு மேலும் உயர்ந்துள்ளது.

டெல்லியில் நேற்று ஒரேநாளில் 1,009 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு நேற்று முன்தினம் பாதிப்பு 632 ஆக இருந்தது. இந்நிலையில் நேற்று 60 சதவீதம் அதிகரித்துள்ளது.

டெல்லியில் கடந்த பிப்ரவரி 10-ந்தேதி நிலவரப்படி பாதிப்பு 1,104 ஆக இருந்தது. அதன் பிறகு அதிகபட்ச தினசரி பாதிப்பாக நேற்று அமைந்துள்ளது.

கேரளாவில் 355, அரியானாவில் 310, உத்தரபிரதேசத்தில் 168, மகாராஷ்டிராவில் 162, மிசோரத்தில் 103 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 49 ஆயிரத்து 974 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட 53 மரணங்கள் நேற்று சேர்க்கப்பட்டுள்ளது. இதுதவிர மிசோரம், டெல்லி, ஒடிசாவில் தலா ஒருவர் நேற்று 3 பேர் இறந்துள்ளனர்.

இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,22,062 ஆக உயர்ந்தது.

தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 1,231 பேர் நேற்று குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 14 ஆயிரத்து 479 ஆக உயர்ந்தது.

தற்போது 13,433 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்று முன்தினத்தை விட 1,093 அதிகமாகும்.

நாடு முழுவதும் நேற்று 15,47,288 டோஸ்களும், இதுவரை 187 கோடியே 7 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி இதுவரை 83.33 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று 4,49,114 மாதிரிகள் அடங்கும்.

Similar News