இந்தியா
மசூதி

மசூதிகளில் ஒலிபெருக்கி சர்ச்சை: வழிகாட்டு நெறிமுறைகளை தயாரிக்கும் மகாராஷ்டிரா அரசு

Published On 2022-04-18 13:51 IST   |   Update On 2022-04-18 16:59:00 IST
மகாராஷ்டிராவில் தற்போதைய மத சூழலை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், ஒரு தனிநபரோ அல்லது நிறுவனமோ சமூகத்தினரிடையே நிலவும் ஒற்றுமையை குழைப்பதாக தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து மசூதிகளிலும் ஒலிப்பெருக்கியை அகற்ற வேண்டும் என மகாராஷ்டிரா நவ்நர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்ரே நேற்று தெரிவித்திருந்தார். ஒலிப்பெருக்கிகள் மே 3ம் தேதிக்குள் அகற்றப்படவில்லை என்றால் அனைத்து இந்துக்களும் சேர்ந்து அனுமார் மந்திரத்தை மசூதிகளுக்கு முன் ஒலிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். சமூகத்தின் அமைதியை நிலைக்குலைப்பதால் இத்தகைய நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அவரின் கருத்துக்கு பாஜகவும் ஆதரவு தெரிவித்திருந்தது. இதையடுத்து எழுந்த சர்ச்சையில், அரசின் அனுமதியுடன் ஒலிபெருக்கி வைத்துகொள்ளலாம் என மகாராஷ்டிரா அரசு தெரிவித்தது. 

இந்நிலையில் தற்போது மும்பை காவல்துறை அதிகாரிகள் ஒலிபெருக்கி வைப்பதற்காக வழிகாட்டு நெறிமுறைகளை தயாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர். இன்னும் 2 நாட்களில் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என அம்மாநில உள்துறை மந்திரி திலிப் வால்சே பாட்டீல் தெரிவித்துள்ளார்.

மேலும் கூறிய அவர், மகாராஷ்டிராவில் தற்போதைய மத சூழலை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஒரு தனிநபரோ அல்லது நிறுவனமோ சமூகத்தினரிடையே நிலவும் ஒற்றுமையை குழைப்பதாக தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

Similar News