இந்தியா
சோனியா காந்தி, பிரசாந்த் கிஷோர்

2024 தேர்தல் வியூகம்- சோனியா காந்தியிடம் விரிவான அறிக்கை வழங்கிய பிரசாந்த் கிஷோர்

Published On 2022-04-16 10:34 GMT   |   Update On 2022-04-16 12:55 GMT
பிரசாந்த் கிஷோர் முன்வைத்த செயல்திட்டத்தை, காங்கிரஸ் தலைவரால் அமைக்கப்படும் குழு ஆய்வு செய்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.
புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், அம்பிகா சோனி, அஜய் மக்கான் உள்ளிட்டோருடன் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்தினார். சுமார் 4 மணி நேரம் இந்த ஆலோசனை நீடித்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோரும் பங்கேற்றார். 

பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைவது பற்றிய பேச்சு அடிபட்ட நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கான வியூகத்தை சமர்ப்பித்துள்ளார்.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை  சந்தித்த பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், 2024 தேர்தல் வியூகம் குறித்த விரிவான விளக்க அறிக்கையை காங்கிரஸ் தலைவரிடம் பிரசாந்த் கிஷோர் அளித்திருப்பதாக கூறினார்.

பிரசாந்த் கிஷோர் முன்வைத்த செயல்திட்டத்தை, காங்கிரஸ் தலைவரால் அமைக்கப்படும் குழு ஆய்வு செய்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கும், அதன்பின்னர் கட்சியின் தலைவர் இறுதி முடிவு எடுப்பார் என்றும் கே.சி.வேணுகோபால் குறிப்பிட்டார்.

Tags:    

Similar News