இந்தியா
மானிட்டர் பல்லி

மகாராஷ்டிராவில் அதிர்ச்சி - மானிட்டர் பல்லியை பலாத்காரம் செய்த 4 பேர் கைது

Published On 2022-04-14 06:22 IST   |   Update On 2022-04-14 06:22:00 IST
மகாராஷ்டிராவில் மானிட்டர் பல்லியை பலாத்காரம் செய்த 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் கோதேன் கிராமம் அருகே ஷாய்தரி புலிகள் காப்பக வனப்பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் நேற்று சந்தேகத்துக்கு இடமாக சுற்றித்திரிந்த 3 இளைஞர்களை வனத்துறையினர் அழைத்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த வேட்டைக்காரர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் வைத்திருந்த செல்போன்களை வாங்கி வனத்துறையினர் சோதித்தனர். அப்போது, சில வாரங்களுக்கு முன்பு இந்த வனப்பகுதிக்கு வந்திருந்த அவர்கள், அங்கிருந்த மானிட்டர் பல்லியான பாலியல் வன்புணர்வு செய்ததை வீடியோவாக எடுத்து வைத்திருந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக, வனத்துறை அதிகாரி கூறுகையில், வன விலங்குகளை பாலியல் பலாத்காரம் செய்தால் எந்த வகையான தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியலாம் என்பது குறித்து சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம். அதுவும் பாதுகாக்க வேண்டிய உயிரினங்களின் பட்டியலில் பல்லிகள் வருகின்றன. எனவே, இவர்கள் குற்றம் நிரூபிக்கப்ப்டடால் 7 ஆண்டு வரை கடுங்காவல் தண்டனை கிடைக்கும் என தெரிவித்தார்.

Similar News