இந்தியா
குழந்தை

முறை தவறிய உறவால் விபரீதம்- குழந்தை பெற்றெடுத்த 12 வயது சிறுமி

Published On 2022-04-13 11:06 IST   |   Update On 2022-04-13 11:06:00 IST
12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்ததால் சந்தேகமடைந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் இதுகுறித்து நெல்லூர் சைல்டு ஹெல்ப் லைன் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
திருப்பதி:

ஆந்திர மாநிலம் நெல்லூர் அடுத்த கிராமத்தை சேர்ந்தவர் (50 வயது) விவசாயி. இவருக்கு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக முதல் மனைவி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கணவரிடம் 2 குழந்தைகளையும் விட்டு விட்டு வேறு ஒருவருடன் சென்றுவிட்டார்.

இதையடுத்து விவசாயி 2-வதாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 12 வயது சிறுமி உள்ளார். கணவன், மனைவி இருவரும் விவசாய நிலத்திற்கு சென்று விடுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக சிறுமி பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

இதனை பயன்படுத்தி கொண்ட முதல் மனைவியின் மகன் சிறுமிக்கு ஆசைவார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் கர்ப்பமானார்.

சிறுமியின் தாய், தந்தை இருவருக்கும் இது தெரியவந்தது. இருப்பினும் அவர்கள் இந்த சம்பவத்தை வெளியே தெரியாமல் பார்த்து கொண்டனர்.

இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சிறுமிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது. சிறுமியை அவரது பெற்றோர் பிரசவத்திற்காக நெல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது.

12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்ததால் சந்தேகமடைந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் இதுகுறித்து நெல்லூர் சைல்டு ஹெல்ப் லைன் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதிகாரிகள் ஆஸ்பத்திரிக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியின் அண்ணனே சிறுமியை கர்ப்பமாக்கியது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

Similar News