இந்தியா
கோப்புப் படம்

அண்டை நாடுகள் விவகாரம் - பிரதமர் மோடியுடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

Published On 2022-04-04 08:55 GMT   |   Update On 2022-04-04 11:36 GMT
அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கையில் நிலவும் சூழல்கள் குறித்து விவாதிக்க பிரதமர் மோடியை வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்தார்.
புதுடெல்லி:

அண்டை நாடான பாகிஸ்தானில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இடைக்கால பிரதமர் நியமிக்கப்படும் வரை இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக நீடிப்பார் என அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல், மற்றொரு அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு ஒட்டுமொத்த அமைச்சரவையும் நேற்று ராஜினாமா செய்தது.

இதையடுத்து, இலங்கையில் அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைக்க இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச அழைப்பு விடுத்ததன்பேர்ல் புதிய அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று சந்தித்தார்.
அப்போது, அண்டை நாடுகளின் அரசியல் சூழல் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
Tags:    

Similar News