இந்தியா
டிஆர் பாலு - தமிழக கவர்னர்

தமிழக ஆளுநர் குறித்து விவாதிக்க கோரி திமுக கவன ஈர்ப்பு நோட்டீஸ்

Published On 2022-04-04 08:38 IST   |   Update On 2022-04-04 11:36:00 IST
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் விவாதிக்க தி.மு.க. சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

மக்களவை பொதுச்செயலாளருக்கு தி.மு.க. மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு நோட்டீஸ் ஒன்றை அளித்து உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக கவர்னர் சட்டப்பிரிவு 200-ன் படி தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்ற தவறி உள்ளார். இதனால் அரசியலைமைப்பு சாசன சட்ட சிக்கல் எழுந்துள்ளது.

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை. மேலும் 3 மசோதாக்களை அவர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் தாமதம் செய்கிறார். இதுகுறித்து உள்துறை மந்திரி விளக்கம் தர வேண்டும்.

இவ்வாறு அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் நகல் பாராளுமன்ற மக்களை சபாநாயகர், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.




Similar News