இந்தியா
உ.பி முதல்வராக பதவியேற்றார் யோகி ஆதித்யநாத்

உ.பி முதல்வராக பதவியேற்றார் யோகி ஆதித்யநாத்

Published On 2022-03-25 11:56 GMT   |   Update On 2022-03-25 11:56 GMT
யோகி ஆதித்யநாத்துக்கு உ.பி ஆளுநர் ஆனந்திபென் படேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதையடுத்து புதிய ஆட்சியமைக்கும் பணியை பாஜக தொடங்கியது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக ஆதித்யநாத் நேற்று ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு அவர் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட மெகா விழாவில் யோகி ஆதித்யநாத் இன்று இரண்டாவது முறையாக உ.பி முதல்வராக பதவியேற்றார். தொடர்ந்து, கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக் ஆகியோரும் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.

அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா ஸ்டேடியத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். யோகி ஆதித்யநாத்துக்கு உ.பி ஆளுநர் ஆனந்திபென் படேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதையும் படியுங்கள்.. முன்னாள் எம்எல்ஏக்களுக்கு இனி ஒரு முறை மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படும்- பஞ்சாப் முதல்வர் அதிரடி
Tags:    

Similar News