இந்தியா
அமர்நாத் யாத்திரை

அமர்நாத் யாத்திரைக்கான ஆன்லைன் முன்பதிவு ஏப்ரல் மாதம் தொடக்கம்

Published On 2022-03-10 19:20 GMT   |   Update On 2022-03-10 19:20 GMT
அமர்நாத் பனிலிங்கத்தை சராசரியாக ஆண்டுதோறும் 3 லட்சம் பேர் தரிசனம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். இந்த யாத்திரை ஆண்டுதோறும் நடைபெறும்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான  அமர்நாத் யாத்திரை தொடங்குவது குறித்து அமர்நாத் கோவில் வாரிய குழு நேற்று விவாதித்தது.

இந்தக் கூட்டத்தில் இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை ஆன்லைன் முன்பதிவு ஏப்ரல் மாதம் தொடங்கும். தினமும் 20 ஆயிரம் பேர் மட்டுமே முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்த அமர்நாத் யாத்திரையில், இந்த ஆண்டு அதிகமானோர் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News