இந்தியா
கோப்பு படம்

கேரளாவில் அங்குசத்தால் குத்திய பாகனை மிதித்த யானை

Published On 2022-03-08 11:05 GMT   |   Update On 2022-03-08 11:05 GMT
பாகனையும் அவரது உதவியாளரையும் தூக்கிவீசியது. பாகனை காலால் மிதித்தது. இதில் பலத்த காயமடைந்த பாகனை உடனடியாக மீட்ட பொதுமக்கள் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

கொல்லம்:

கேரளாவில் கோவில் விழாக்களில் யானைகளை பயன் படுத்துவது வழக்கம். அப்படி பயன்படுத்தும்போது அடிக்கடி அவைகள் மிரண்டு பொதுமக்களையும் பாகன்களையும் தாக்கும் சம்பவங்களும் நடப்பது உண்டு.

இந்நிலையில் கடந்த ஞயிற்றுக்கிழமை கேரள மாநிலத்தின் கொல்லத்திற்கு அருகில் உள்ள கோவில் திருவிழாவிற்காக யானை ஒன்று கொண்டுவரப்பட்டது.

அப்போது யானையின் மீது அமர்ந்து வந்த பாகன் கீழே விழுந்த பையை எடுப்பதற்காக யானையின் மீதிருந்து கீழே இறங்கினார். அப்போது பாகனின் உதவியாளர் யானையின் முன் காலில் அங்குசத்தால் பலமாக தாக்கினார். இதனால் யானை ஆத்திரமடைந்தது.

பின்பு பாகனையும் அவரது உதவியாளரையும் தூக்கிவீசியது. பாகனை காலால் மிதித்தது. இதில் பலத்த காயமடைந்த பாகனை உடனடியாக மீட்ட பொதுமக்கள் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அவருடைய பல எலும்புகள் உடைந்துள்ளதாகவும், அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News