இந்தியா
கர்நாடகா மாணவர் மீட்பு

கர்நாடகாவின் நந்தி மலையில் சிக்கி தவித்த மாணவர் மீட்பு

Published On 2022-02-21 08:49 IST   |   Update On 2022-02-21 08:49:00 IST
மீட்பு நடவடிக்கையில் விமானப்படை ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது.
நந்தி ஹில்ஸ்:

கர்நாடகாவின் நந்தி மலையில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்த  நிஷாங்க் என்ற மாணவன், எதிர்பாராத விதமாக 300 அடிக்கு கீழே விழுந்து பிரம்மகிரி பாறை இடுக்கில் சிக்கிக் கொண்டார். 

இது குறித்து தகவல் அறிந்த சிக்பல்லப்பூர் மாவட்ட ஆட்சியர், மீட்பு நடவடிக்கை தொடர்பாக யெலஹங்கா பகுதி விமானப்படையினருக்கு தகவல் அளித்தார். 
இதையடுத்து விமானப்படை  ஹெலிகாப்டர் மூலம் அந்த மாணவரை மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிக்கபள்ளாபூர் பகுதி போலீசாரும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு பாறை இடுக்கில் அசைய முடியாமல் சிக்கியிருந்த நிஷாங்கை கண்டு பிடித்த விமான படையினர் அவரை பத்திரமாக மீட்டனர். விமானப்படைய சேரந்த மருத்துவ உதவியாளர் அந்த மாணவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

Similar News