இந்தியா
விபத்து

பள்ளத்தாக்கில் வேன் கவிழ்ந்து 4 பேர் பலி

Published On 2022-02-14 19:32 IST   |   Update On 2022-02-14 19:32:00 IST
விபத்து பற்றி தகவல் அறிந்த முதல்வர் பேமா காண்டு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இடாநகர்:

அருணாச்சல பிரதேச மாநிலம் கிரா டாடி மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன், சுமார் 20 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. டாலியில் இருந்து நேற்று மாலை பாலின் நோக்கி சென்றபோது குமே பாலத்தின் அருகே, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்துள்ளது. இதில், வேனில் பயணித்த 4 பேர் உயிரிழந்தனர். 9 பேர் பலத்த காயமடைந்தனர்.

விபத்து பற்றி தகவல் அறிந்த முதல்வர் பேமா காண்டு, வேதனை தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொண்டார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து நிவாரண உதவி வழங்கப்படுவதாகவும் கூறினார்.

Similar News