இந்தியா
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் அமர்வு நிறைவு - மாநிலங்களவை மார்ச் 14 வரை ஒத்திவைப்பு

Published On 2022-02-11 11:26 GMT   |   Update On 2022-02-11 12:04 GMT
பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக கடந்த ஜனவரி 31-ம் தேதி பாராளுமன்றம் கூடியது.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு இன்றுடன் நிறைவடைந்தது. இன்று மாநிலங்களவை கூடியதும் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து  நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார். அதையடுத்து பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாகம் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மாநிலங்களவை மார்ச் 14-ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுகிறது என துணை சபாநாயகர்  அறிவித்தார்.

அடுத்த மாதம் 14-ம் தேதி வரை இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News