இந்தியா
பாடப்புத்தகங்களை நடிகை ரோஜா வழங்கிய காட்சி

ஆந்திராவில் தமிழ் வழி கல்வி பயிலும் 1000 மாணவர்களுக்கு பாட புத்தகம்- மு.க.ஸ்டாலினால் அனுப்பி வைக்கப்பட்டது

Published On 2022-02-11 10:06 GMT   |   Update On 2022-02-11 10:06 GMT
ஆந்திர மாநிலம், நகாயில் தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழ் வழி புத்தகம் வேண்டும் என்று எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கேட்டுக் கொண்டார்.

திருமலை:

ஆந்திராவில் தமிழ்வழி கல்வி பயிலும் 1000 மாணவர்களுக்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்த பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

ஆந்திர மாநிலம், நகாயில் தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழ் வழி புத்தகம் வேண்டும் என்று எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கேட்டுக் கொண்டார். இதையடுத்து 1000 மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் ஆந்திராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த புத்தகங்கள் தமிழ் வழி மாணவர்களுக் வினியோகம் செய்யப்பட்டது.

இதில் பட்டிமன்றப் பேச்சாளரும் தமிழக பாடநூல் கழகத் தலைவருமான திண்டுக்கல் லியோனி, நடிகை ரோஜா, திருத்தணி எம்.எல்.ஏ. சந்திரன், இயக்குனர் ஆர்.கே. செல்வமணி ஆகியோர் இணைந்து மாணவர்களுக்கு வழங்கினர்.

Tags:    

Similar News