இந்தியா
ஜம்மு காஷ்மீர் - பாதுகாப்பு படையுடனான துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி சுட்டுக் கொலை
ஜம்மு காஷ்மீரில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா பகுதியில் ராணுவம், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதி திடீரென பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இதற்கு பாதுகாப்புப் படையினர் கொடுத்த பதிலடி தாக்குதலில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார் என காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்...வீரர்கள் சவால் விடும் வகையில் விளையாட வேண்டும் - ரோகித் சர்மா