இந்தியா
மசூதியை பராமரிக்கும் இந்து குடும்பம்

50 ஆண்டுகளாக மசூதியை பராமரிக்கும் இந்து குடும்பம்

Published On 2022-02-04 22:02 GMT   |   Update On 2022-02-04 22:02 GMT
கிழக்கு பாகிஸ்தானில் இருந்து இடம் பெயர்ந்த ஈஸ்வர் நிரோத் போஸ் குடும்பத்தினர் 1964 ஆம் ஆண்டு முதல் மசூதியை பராமரித்து வருகின்றனர்.
பராசத்:

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வகுப்புவாத பதற்றம் பற்றிய செய்திகள் வெளியாகும் நிலையில், மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக மேற்கு வங்க மாநிலத்தில் மசூதி ஒன்றை இந்து குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர்.

1964 ஆண்டு அப்போதைய கிழக்கு பாகிஸ்தானின் குல்னா பகுதியில் இருந்து  கலவரம் காரணமாக ஈஸ்வர் நிரோத் போஸ் தமது குடும்பத்தினருடன் மேற்கு வங்க மாநிலம் பராசத் பகுதிக்கு இடம் பெயர்ந்தனர். 

இதையடுத்து குல்னாவில் உள்ள தங்கள் இடத்திற்கு  பதிலாக பராசத்தில் இருந்த கியாசுதீன் மொரோல் என்ற நில உரிமையாளருடன் அவரது நிலத்தை ஈஸ்வர் போஸ் சட்டப்படி இடமாற்றம் செய்து கொண்டுள்ளார். 

அந்த நிலத்தில் சிறிய மசூதி இருப்பதை கண்ட தீவிர தேச பக்தரான போஸ், அதை பராமரித்து நடத்த விரும்பியதாக அவரது மகன்  தீபக் போஸ் தெரிவித்துள்ளார். 

இதற்கு கியாசுதீன் மொரோல் அனுமதித்தை அடுத்து கடந்த 50 ஆண்டுகளாக அந்த மசூதியை தங்கள் குடும்பம் கவனித்து வருவதாக 74 வயதான தீபக் போஸ் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News