இந்தியா
ஆசிட் வீச்சு

வயநாடு அருகே இளம்பெண்-சிறுமி மீது ஆசிட் வீசிய வாலிபர்

Update: 2022-01-16 09:00 GMT
திருவனந்தபுரம் வயநாடு அருகே இளம்பெண் மற்றும் சிறுமி மீது ஆசிட் வீசிய வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் வயநாடு அருகே அம்பலவாயல் பகுதியை சேர்ந்தவர் சனல். கூலி தொழிலாளி. இவரது மனைவி நிஜிதா (வயது 39). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இவர்கள் அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக நிஜிதா கணவரை பிரிந்து தனியாக மகளுடன் வசித்து வந்தார்.

சம்பவத்தன்று நிஜிதாவும் அவரது மகளும் வீட்டில் இருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் அவர்கள் மீது ஆசிட் வீசிவிட்டு தப்பி சென்றார். இதில் நிஜிதாவின் முகம் கருகியது.அவரது மகளுக்கும் அலகநந்தாவுக்கும் ஆசிட் பட்டு காயம்ஏற்பட்டது.

இருவம் வலியால் அலறி துடித்து சத்தம் போட்டனர். அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து அவர்களை மீட்டு கோழிக்கோடு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அம்பலவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இச்சம்பவத்தில் நிஜிதாவின் கணவரே ஈடுபட்டாரா? அல்லது வேறு நபரா ? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News