செய்திகள்
அமித்ஷா

கர்தார்பூர் பாதை இன்று திறக்கப்படும் - உள்துறை மந்திரி அமித்ஷா

Published On 2021-11-16 23:44 GMT   |   Update On 2021-11-16 23:44 GMT
குருநானக் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் கர்தார்பூர் பாதை எப்போது திறக்கப்படும் என சீக்கியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
புதுடெல்லி:

பாகிஸ்தானின் நரோவல் மாவட்டத்தில் கர்தார்பூர் என்ற இடத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான சீக்கியர்களின் புனித தலமான குருத்வாரா உள்ளது.

இந்தப் புனித தலத்திற்கு இந்தியாவில் இருந்து சீக்கியர்கள் விசா இன்றி செல்வதற்காக இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் எல்லையில் இருந்து கர்தார்பூர் வரை பாதை போடப்பட்டுள்ளது. இப்பாதையை சில ஆண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பொது முடக்கம் காரணமாக கர்தார்பூர் பாதை மூடப்பட்டது. 

இந்நிலையில், உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று கூறுகையில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு சீக்கிய யாத்ரீகர்களுக்கு பயனளிக்கும் வகையில் கர்தார்பூர் சாஹிப் பாதையை புதன்கிழமை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Tags:    

Similar News