செய்திகள்
ஜிகா வைரஸ்

உத்தரபிரதேசத்தின் கான்பூரில் மேலும் 30 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு

Published On 2021-11-06 02:22 GMT   |   Update On 2021-11-06 02:22 GMT
கான்பூர் மாவட்டத்தில் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில், 45 பேர் ஆண்கள், 21 பேர் பெண்கள் ஆவர்.
கான்பூர் :

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த 23-ந் தேதி இந்திய விமானப்படை அதிகாரி ஒருவருக்கு முதல் முறையாக ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அடுத்தடுத்து மேலும் சிலருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, இந்திய விமானப்படை நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களிடையே மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, லக்னோவில் உள்ள ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில், 30 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, கான்பூர் மாவட்டத்தில் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில், 45 பேர் ஆண்கள், 21 பேர் பெண்கள் ஆவர். நோய்ப்பரவலை தடுக்க கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்துமாறு சுகாதாரத்துறைக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News