செய்திகள்
சவும்யா சுவாமிநாதன்

கொரோனா தடுப்பூசி உற்பத்தி திறனை இந்தியா நிரூபித்து விட்டது - உலக சுகாதார நிறுவனம் பாராட்டு

Published On 2021-03-02 22:29 GMT   |   Update On 2021-03-02 22:29 GMT
கொரோனா தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் திறனையும், தயாரிக்கும் திறனையும் இந்தியா காண்பித்து விட்டதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

டெல்லியில், ‘குளோபல் பயோ-இந்தியா 2021’ என்ற 3 நாள் கருத்தரங்கம் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த கருத்தரங்கில் நேற்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. அதனால், கொரோனாவுக்கு எதிரான போர், முக்கியமான காலகட்டத்தில் உள்ளது. புதிய வகை கொரோனாக்கள் பரவி வருகின்றன. அதனால் நிச்சயமற்ற நிலைமை காணப்படுகிறது.

இருப்பினும், உலக அளவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதிலும், அதை தயாரிப்பதிலும் இந்தியா தனது திறனை செயலில் காட்டி உள்ளது. இந்த தடுப்பூசிகளின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய பெரிதும் வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News