செய்திகள்
கோப்புப்படம்

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2021-02-11 00:07 IST   |   Update On 2021-02-11 00:07:00 IST
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமராவதி:

ஆந்திராவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு சீராக குறைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 50 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றில் இருந்து 121 பேர் இன்று குணம் அடைந்துள்ளனர்.

மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 88 ஆயிரத்து 605 ஆக உள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 80 ஆயிரத்து 599 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை 7,161 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 845 ஆக உள்ளது.

Similar News