முதல்-மந்திரி எடியூரப்பாவை தவிர்த்து பெங்களூருவில் முக்கிய தலைவர்களுடன் அமித்ஷா ரகசிய ஆலோசனை நடத்தினார். இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
எடியூரப்பாவை தவிர்த்து முக்கிய தலைவர்களுடன் அமித்ஷா ரகசிய ஆலோசனை
பதிவு: ஜனவரி 18, 2021 07:14
அமித்ஷா
பெங்களூரு :
உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணமாக கர்நாடகம் வந்தார். அவர் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் தங்கினார். பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் எடியூரப்பா கலந்து கொண்டு விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். அதன் பிறகு பா.ஜனதா முக்கிய தலைவர்களுடன் அமித்ஷா சுமார் 2 மணி நேரம் ரகசிய ஆலோசனை நடத்தியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இதில் மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல், பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங், தமிழக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் எடியூரப்பாவை முதல்-மந்திரி பதவியில் நீட்டிக்க அனுமதிப்பது குறித்தும், ஆட்சி நிர்வாகத்தில் எடியூரப்பா குடும்ப உறுப்பினர்களின் தலையீட்டை தடுப்பது குறித்தும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. முதல்-மந்திரி எடியூரப்பாவை தவிர்த்து இந்த கூட்டம் நடைபெற்றது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :